SP Lakshmanan - Stalin is an "OUTSTANDING" Leader. We need "UNITED ADMK" to stop BJP. #EPS, #OPS, #saikala, #TTV has to unite.
Subscribe: @One Voice Tamil
முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தில், முக்கிய பங்காற்றிய தொழிலதிபர் யூசுப் அலியின், 'லுாலுா' குழுமம், தமிழகத்தில் 3,500 கோடி ரூபாயில், 'சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால்'களை துவங்க உள்ளது.முதல்வராக பொறுப்பேற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக, 24-ல், தனி விமானத்தில் குடும்பத்துடன் துபாய் சென்றார் ஸ்டாலின்.
நான்கு நாள் பயணத்தில், லுாலுா நிறுவனத்துடன் 3,500 கோடி ரூபாய்; 'நோபல் ஸ்டீல்ஸ்' நிறுவனத்துடன் 1,000 கோடி ரூபாய்; 'ஒயிட் ஹவுஸ், ஆஸ்டர் டி.எம்.ஹெல்த்கேர், ஷெராப்' ஆகிய நிறுவனங்களுடன் தலா 500 கோடி ரூபாய். 'டிரான்ஸ்வேர்ல்டு' குழுமத்துடன் 100 கோடி ரூபாய் என, ஆறு நிறுவனங்களுடன், 6,100 கோடி ரூபாய் முதலீடு செய்ய, தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன.ஸ்டாலினின் முதல் வெளிநாட்டு பயணத்தை, தி.மு.க.வும், தமிழக
அரசும் பெரிய சாதனையாக கொண்டாடி வருகின்றன. கூட்டணி கட்சி தலைவர்களும், ஸ்டாலினுக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
ஆனால், மனைவி, மகன், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள், மகனின் நண்பர்கள் என குடும்பத்தினர் சூழ, தனி விமானத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டது சர்ச்சையாகி உள்ளது.ஸ்டாலினின் துபாய் பயணம், சில மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. துபாயில் எங்கெங்கு செல்வது, யார் யாரை சந்திப்பது, எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, எந்தெந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது உள்ளிட்டவற்றை முடித்தது, ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், தொழிலதிபர் யூசுப் அலியும் தான் என்கின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த யூசுப் அலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் கொடி கட்டி பறக்கும் மிக முக்கியமான தொழிலதிபர். உலகம் முழுதும் அவரது லுாலுா குழும நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், தொழிலதிபர்களை சந்திக்க ஏற்பாடு செய்த யூசுப் அலி, நான்கு நாட்களும் ஸ்டாலினுடன் இருந்தார்.
துபாய் பயணம் குறித்து, தி.மு.க., தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், 'அமீரக பயணத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் யூசுப் அலி. தமிழகத்தில் முதலீடுகள் செய்வதில், அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார்' என ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இந்த பயணத்தில், அபுதாபியில் உள்ள யூசுப் அலியின் பங்களாவுக்கும் ஸ்டாலின் சென்றார்.இந்நிலையில், தமிழகத்தில் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டு வணிக வளாகங்கள்; 1,000 கோடி ரூபாயில் ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்துதல் தொழில்களை, லுாலுா நிறுவனம் துவங்க உள்ளது.
எதிர்க்கட்சியாக இருந்த போது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தி.மு.க., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், இப்போது வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் துவங்க, கார்ப்பரேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
'இதனால், தமிழக வியாபாரிகள் பாதிக்கப்பட மாட்டார்களா? வணிகர் சங்சங்கள் எதிர்க்குமா?' என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல்வரின் வெளிநாட்டு பயணம் என்றால், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அதிகாரிகள் தான் அனைத்தையும் செய்வர். ஆனாலும், ஸ்டாலினின் துபாய் பயணத்திற்கான அனைத்தையும் சபரீசனும், தொழிலதிபர் யூசுப் அலியும் செய்திருப்பது, அரசு அதிகாரிகள், அமைச்சர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.'அரசுக்கு வெளியே அதிகார மையம் இருப்பது நல்லதல்ல' என்பதே அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.

0 Comments